ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை!
Friday, June 17th, 2022
ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20,939 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மேல் மாகாணத்திலேயே அதிகூடிய எண்ணிக்கையானோர் பதிவாகியுள்ளனர்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் மேல் மாகாணத்தில் 7,963 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் - பொலிஸ் மா அதிபர்!
அரிசி இறக்குமதி திறைசேரியின் கண்காணிப்பில் !
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்குமேலும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் - கடும் சீற்...
|
|
|


