அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தர்ஷன சிறிசேன தெரிவு!
Wednesday, June 15th, 2022
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்தியர் தர்ஷன சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்தர பொதுசபை கூட்டத்தில் அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர் தர்ஷன சிறிசேன விசேட வைத்தியர்களுக்கான இடமாற்ற சபையின் தலைவராக முன்னதாக செயற்பட்டிருந்தார்.
அதேநேரம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளராக வைத்தியர் ஹரித அலுத்கே போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
00
Related posts:
தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி கோர விபத்து - 20 இக்கும் அதிகமானோர்...
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை நீடிக்கலாம் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு!
வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!
|
|
|


