தொடர்ந்து பெய்யும் சீரான மழைவீழ்சி – நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022

நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

அதற்கமைய, நீர் மின் உற்பத்தியிலிருந்து 48 வீதமான மின்சாரம் தேசிய கட்டமைப்பில் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் அன்றூ நவமனி தெரிவித்துள்ளார்..

இதேவேளை அனல் மின் உற்பத்தியினூடாக 44 வீதமான மின்சாரம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியினூடாக 10 வீத மின்சாரமும் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், நீர் மின் உற்பத்தியினூடாக போதுமானளவு மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைப்பதற்கு இயலுமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த A மற்றும் B அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான மசகு எண்ணெய் கிடைத்துள்ளது.

எரிபொருள் இன்மையால், பத்தல மற்றும் வடக்கு ஜனனி மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் அன்றூ நவமனி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106