கிழக்கு மாகாண சபையின் அரச நிறுவனங்களில் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு மாகாண ஆளுநர் பணிப்பு!
Friday, June 3rd, 2022
கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும், வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் போதனாசிரியர்களுடன், பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் அவரால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கக்கு முகங்கொடுப்பதற்காக, விவசாய ஆலோசகர்கள் மூலம், விவசாயிகளை விழிப்புணர்வூட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாகாண விவசாய அமைச்சின் தலையீட்டில் இந்தப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டாவுக்கு அவர் அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக...
பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை - கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!.
|
|
|


