நல்லிணக்க பொறிமுறை செயலகத்திற்கு செயலூக்கம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, August 25th, 2016
நல்லிணக்க பொறிமுறை செயலகத்தை செயலூக்கப்படுத்த அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த செயலகம், நல்லிணக்கம் தொடர்பான கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்ற பணிகளின் நிமித்தம் செயற்படவுள்ளது
இந்தநிலையில் இந்த பொறிமுறை செயலகத்துக்கு நிதி மற்றும் ஆளனிகளை அதிகமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த செயலகத்தின் செயலாளர் நாயகமாக மனோ தித்ததவெல கடமையாற்றுகிறார். இதேவேளை இந்த செயலத்தின் கீழ், உண்மையை கண்டறியும் குழு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் என்பனவும் இயங்கவுள்ளன.
Related posts:
27 நிறுவனங்களுக்கு செல்லும் பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி!
நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் - சில பகுதிகளில் இரவில் மின்சார தடை ஏற்பட வாய்ப்பு - மின்...
சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானம்!
|
|
|


