இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி !

Friday, May 27th, 2022

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகர் ரஹீம் 175 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 506 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 80 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 58 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், எபடோட் ஹொசைன் 148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தமது இரண்டாம் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் ஷகிப் அல் ஹசன் 58 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் ஹசித பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு 29 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை அணி 3 ஓவர்கள் நிறைவில் 29 ஓட்டங்களை பெற்று போட்டியை வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106