இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

Friday, March 25th, 2016
இலங்கைக்கு 34 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் கையெழுத்திட்டுள்ளது.
கிழக்கு பல்கலைகழகத்தின் உடல்நல விஞ்ஞானபீட கட்டட நிர்மாணத்திற்கான நிதி உதவியை வழங்கும் வகையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துதல் மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை இலக்காக கொண்டு மட்டக்களப்பில் புதிய உடல்நல விஞ்ஞானபீடத்தை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106