பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு !
Tuesday, May 24th, 2022
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்படும் அதேவேளை மேலதிகமான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபா அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயணக் கட்டண உயர்வு போதுமானதாக இல்லாவிட்டாலும், பயணிகளின் நலனைக் கருத்திற் கொண்டு, தங்கள் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை அவதானிப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பேருந்துக்கான காத்திருந்தவர்களை திடீரென மோதித் தள்ளியது ஆட்டோ!
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு!
யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்பு சத்தம் - பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் அறி...
|
|
|


