பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வைத்தியசாலையில்!

Wednesday, August 24th, 2016

பிரபல இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் படிக்கட்டிலிருந்து தடக்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், நீதிக்கு தண்டனை, ரசிகன் உள்ளிட்ட பல புரட்சிகரமான படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

அந்த படத்திற்குப் பின்னர் நையப்புடை, கொடி ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று திடீரென கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் குமரகம் பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், இன்று ஹோட்டல் மாடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது காலில் காயம் ஏற்படவே, உடனடியாக கோட்டயத்தில் உள்ள தனியார் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106