மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை!
Monday, May 16th, 2022
நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
எனவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை ஏதேனும் கலவர நிலைமை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவுகளையும் அவர் வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வளிமண்டலவியல் திணைக்களம் நவீனமயப்படுத்தப்படும் - அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா!
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை மத்த...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு - அவசர இலக்கம் அறிமுகம்!
|
|
|


