கிரிக்கெட் சபையின்  கோரிக்கைக்கு முரளி மறுப்பு!

Saturday, August 13th, 2016

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் தான் கலந்துக் கொள்ள இயலாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் போட்டித் தொடரை தொடர்ந்து இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவுக்கு முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முரளிதரன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ள காரணத்தினால் பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவுக்கு முத்தையா முரளிதரன் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அதிக பணிச்சுமை - தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் - அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!
கிளிநொச்சியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெறச் சென்ற மாணவி அரச பேருந்து மோதிப் பலி – மற்றுமொரு மாணவி...
உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் கிரிக்கட் சபை இணக்கம்!