7 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிமுதல் மீண்டும் நாளை காலை 6 மணிவரை நடைமுறை!
Thursday, May 12th, 2022
நாடு முழுவதும், நாளை காலை 6 மணிவரை காவல்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பதாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டிருந்தது.
இவ்வாறு தளர்த்தப்படும் காவல்துறை ஊரடங்கு சட்டமானது, பின்னர் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டதுடன் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் ரோந்து பணி!
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அழைப்பு - இந்திய இராணுவ பிரதானி வியாழன்று இலங்கை விஜயம்!
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர...
|
|
|


