மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம் – ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!
Wednesday, May 11th, 2022
மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, நேற்று இரவு முதல் அனைத்து இரவுநேர தபால் சேவை ரயில்களும் நிறுத்தப்பட்டன.
காவல்துறை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில்சேவைகளையும் இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் பல்வேறு இடங்களிலும் அரசுக்கெதிரான அமைதி வழி போராட்டங்கள் தற்போது வன்முறை சம்பவங்களாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புனரமைக்கப்பட்ட கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டல் பிரதமரின் தலைமையில் திறந்து வைப்பு!
உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொ...
நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்கும் - ஜனாதிபதி உறுதி!
|
|
|


