ஐநாவின் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று!

Tuesday, March 23rd, 2021

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகளை சுட்டிக்காட்டி குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்த பிரேரணையை பிரித்தானியா, ஜேமனி, கனடா, மலாவி, மொண்டிநீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து சமர்ப்பித்திருந்தன.

47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெறவிருந்தது.

ஆனாலும், பிரேரணை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இன்று வரை வாக்கெடுப்பு பிற்போடப்பட்டிருந்தது.

இதற்கு அமைய 46 ஆவது மனித உரிமைகள் கூட்டதொடரின் 46 எல்/1 ஆம் இலக்க இலங்கை தொடர்பான பிரேரணை ஜெனீவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்தின் கட்டடத்துக்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக...
நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் - இலங்கை தனியார் பேர...
போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய பாடசாலைகளை சுற்றி பொலிஸார் கடமையில்!