நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, May 2nd, 2022

மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்றையஶ்ரீதினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய அதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்.

அதனை தொடர்ந்து, ஊவா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பெறுமதி சேர் வரி விகிதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும் – ஈபிடிபி ஊடக பேச...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!