இந்திய கடன் திட்டத்தின் கீழ் சதொச ஊடாக இன்றுமுதல் 145 ரூபாவுக்கு அரிசி – வர்ததக அமைச்சு அறிவிப்பு!
Saturday, April 23rd, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கு சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனது செய்ய முடியும்
ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம...
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
வடக்கின் சிறுநீரக நோயாளர்களுக்கு 10 இலட்சம் மானியத்துடன் சிகிச்சை - Melsta வைத்தியசாலை நடவடிக்கை!
|
|
|


