பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணமடைந்துள்ளது – பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவிப்பு!
Friday, April 22nd, 2022
பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும் போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மின்சார நெருக்கடியினால் பாதிப்படைவார்கள் என்று எதிர்க்கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அடுத்த மாதத்தை அண்மிக்கும் போது நாள் ஒன்றில் இரண்டு மணி நேரம் மாத்திரம் மின் துண்டிக்கப்படலாம் என்றும் கூறினார்.
இதனிடையே
இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106