யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!
Thursday, April 21st, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
யாழ். பல்கலைக் கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி சி. சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நிதியாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர், மாணவர் நலச்சேவைகள் உதவிப்பதிவாளர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு புதுமுக மாணவர்களுக்கு பல்கலைக்கழக நடைமுறைகள் மற்றும் மாணவர் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில் பீடாதிபதிகள், முன்னாள் விளையாட்டு விஞ்ஞானத் துறை இணைப்பாளர்கள், உடற்கல்வி அலகின் பணிப்பாளர் மற்றும் பயிற்றுநர்கள், விரிவுரையாளர்கள், முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், விளையாட்டு விஞ்ஞானத் துறையின் உயர் டிப்ளோமா மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106