எரிபொருள் தாங்கியை தீவைக்க முற்பட்டமையே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் – பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அறிவிப்பு!

Wednesday, April 20th, 2022

றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட தாங்கி ஊர்தியொன்றுக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தவிர்க்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

12 மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முயற்சித்ததாக காவல்துறைமா அதிபர் தெரிவித்தார்.

அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்த போதிலும், அவர்கள் கட்டளைக்கு மாறாக செயற்பட்டதால் தடியடி பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகங்களை மேற்கொண்டு அடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்போது, ஒரு குழுவினர் கலைந்து சென்ற போதிலும், மேலும் சிலர் தொடருந்து பாதையில் இருந்த கற்களை வீசி தாங்கி ஊர்தியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொவிசாரை கடுமையாக தாக்கியதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

அதன்போது, பொலிசார் குறைந்த பட்ச பலத்தை பிரயோகித்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் முழங்காலுக்கு கீழே சுட உத்தரவிட்டு கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிசாரின் அதிக பலத்தை பிரயோகித்தனரா? என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் டி அல்விஸ், பொலிஸ் அதிகாரிகள் அதிகாரத்திற்கு அப்பால் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106