இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை!
Thursday, April 14th, 2022
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.
உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறுமை கோட்டுக்கு உட்பட்டோர் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உலக வங்கி உறுதி பூண்டுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொழுப்பு உணவுகள் குறித்தும் வருகிறது சட்டம்!
ஆசிய கிண்ணதத் தொடர்: இலங்கை தேசிய அணியில் மத்திய கல்லூரி மாணவன் மதுஷன்!
இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை - நியூசிலாந்து சபாநாயகர்களுக்கிடையில் விசேட கலந்து...
|
|
|


