வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம் – நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Tuesday, April 12th, 2022
இலங்கையின் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு பொறுப்புள்ள நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துவதை உரிய கலந்துரையாடல் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பணமாகவோ அல்லது பொருட்கள், சேவைகளாகவோ வெளிநாட்டு நாணயங்களில் பெற்றுக் கொண்ட கடன்களே இவ்வாறு மீள் செலுத்துவது இடைநிறுத்தப்படுவதாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன் இணைந்தவாறு மேலதிக நடவடிக்கைகள் இடம்பெறுமென, அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
உண்மை விலைகளை தெளிவாக ஆடைகளில் பொறிக்க வண்டும் - பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்து!
வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவி!
முறை தவறிய சாரதித்துவம்: 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம்!
|
|
|


