வன்முறை கும்பலால் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி தீக்கிரை!

Tuesday, April 12th, 2022

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கர வண்டியை அடித்து நொறுக்கிவிட்டு அதற்கு தீ வைத்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related posts:


அச்சுறுத்தலான சூழ்நிலையை மக்கள் கவனத்தில் கொள்ளாது செயற்படுகின்றனர் - சுகாதார அமைச்சு குற்றச்சாட்டு!
பல்வேறு முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றும் நோக்குடன் இன்றுமுதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ம...
பல்கலைக்கழக மாணவர்கள் 57 பேர் இதுவரை பகிடிவதை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் - உயர்கல்வி இராஜாங்க அமைச்...