சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்!
Tuesday, April 12th, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் நேற்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீத்தொட்ட அனர்த்தம் தொடர்பில் ஜப்பான் அனுதாபம் தெரிவிப்பு!
சிமெந்தின் விலை அதிகரிப்பு - நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி!
அனைத்து எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்...
|
|
|


