மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை!
Tuesday, August 23rd, 2016
தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடரிலும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்படமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட ஆரம்பத்தில் காயமடைந்த அவர், ஐ.பி.எல். போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த நிலையில் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் அடுத்த வருடம் வரையில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் தென்னாப்பிரிக்காவுடனான கிரிக்கட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது
Related posts:
ஆஸிக்கு எதிரான இலங்கைஅணி அறிவிப்பு!
23 ஓட்டங்களில் சுருண்டது நேபாளம் - இலங்கை அணி இலகு வெற்றி!
இலங்கை இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகுந்த ஆர்வம்!
|
|
|


