நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் – மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, March 31st, 2022
நீர்மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின்சார துண்டிப்புக்கு பிரதான காரணம் என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமனலவாவி உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ்வாறு நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் மின்னுற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, நாட்டுக்கு தேவையான மின்முனையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னரே மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு நாணய கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106