பொருளாதார சீர்திருத்தங்களை பொருட்படுத்தாது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022

பொருளாதார சீர்திருத்தங்களை பொருட்படுத்தாது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரும் போது அமெரிக்காவின் ஆதரவை தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு நீண்டகால அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவை தூதுவர் பாராட்டியுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) கடன் வசதிகளை வழங்கும் என்றும் அமெரிக்க தூதர் இதன் போது தெரிவித்தார்.

இலங்கைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான காரணங்கள் குறித்தும் ஜனாதிபதி தூதுவர் ஜூலி சுங்கிடம் இதன் போது விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106