சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளது – சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு மத்திய வங்கி பதிலளிப்பு!
Saturday, March 26th, 2022
சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பிரதிபலன் கிடைப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்படத் தயார் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வங்கி தமது நிலைப்பாட்டை அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!
ஜெனீவா குற்றச்சாட்டுக்கான வரைவு பதில் நாளை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் தி...
சம்பந்தனின் மறைவை அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கின்றது தமிழரசுக் கட்சி - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி...
|
|
|


