வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு – மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
Saturday, March 26th, 2022
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய A முதல் L வரையான வலயங்களில் இன்றைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
மேற்படி வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது. அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரையில் 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பிரயோகிக்கும் உரிமை உண்டு!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தலைவர் நியமனம்!
ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!.
|
|
|


