எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் நாமல் கோரிக்கை!
Wednesday, March 23rd, 2022
மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு - பொலிஸார் விசாரணை
யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்து குறித்து பயணிகள் குற்றச்சாட்டு!
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் 14ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்பு!
|
|
|


