ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Saturday, March 19th, 2022
ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரத்தினை அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி அமைச்சரவையில் யோசனை!
புகையிரத பயணிகளின் பாதுகாப்புக்கு 210 விண்ணப்பங்கள்!
இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றைய தினமே பதிலளிக்கப்படும் - எவருக்கும் அஞ்சி நிலைப்பாட்டிலிருந்து இலங்க...
|
|
|


