தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நாம் காரணம் அல்ல – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம். இதை எமக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்களும் புரிந்துகொள்வார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆட்சியைக் கவிழ்க்க எதிரணியினர் படாதபாடுபடுகின்றனர். அவர்கள், தமது ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர். இதனால் என்ன பயனை அவர்கள் அடைந்தார்கள் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிரணியினர், ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், 69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி இதில் உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106