கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்கள் கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சிலர் பொய்யான பிரசாரங்களை பரப்புவதாக, காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சிறப்பு அங்காடிகளையும், வீடுகளையும் உடைத்து பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. இந்தநிலையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!
எதிர்வரும் திங்கள்முதல் மூடப்பட்ட பொது சந்தைகளை திறக்கலாம் – திருமண நிகழ்வில் 150 பேரை அழைப்பதற்கும்...
ஆசிய - பசுபிக் வலய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் கொழும்பில்!
|
|
|


