அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
Wednesday, March 16th, 2022
அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றுமுதல் (15) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று நாட்டில் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதினை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே...
விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி - எயர் வைஸ் மார...
|
|
|


