உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
Wednesday, March 16th, 2022
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 98 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. நேற்றையதினம் அதன் விலை, 100 டொலர் அளவில் காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக, ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - இர...
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி – வடக்கு உள்’ளிட்ட பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணை...
கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !
|
|
|


