சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Friday, March 11th, 2022

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக் கான நீர் விநியோகத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் நீர் வெட்டுகள் மேற்கொள்ளப்படும் என அதன் பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நீர் பாவனையாளர் 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க சட்டத்தின்படி தண்ணீர் பில் வழங்கப் பட்ட 30 நாட்களுக்குள் தங்கள் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். மேலும் சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்ட 48 மணி நேரத்துக்குள் பில்கள் செலுத்தப்பட வேண்டும்.

நீர் வெட்டு தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகி 14 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தத் தவறிய நுகர்வோருக்கு மாவட்ட அளவில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என உதவிப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் நுகர்வோர் செலுத்தத் தவறிய தொகை சுமார் 7200 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும் தற்போது அது 6000 மில்லியன் ரூபாவாகும் எனவும் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பின்னர் மீண்டும் இணைக்க வீட்டு வாடிக்கையாளர் களுக்கு 1080 ரூபாவும் மற்றும் பொது / தனியார் / வழிபாட்டுத் தலங்கள் / வணிக நிறுவனங்களுக்கு 3 ஆயிரத்து 240 ரூபாவும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..

இதனிடையே சுமார் 1.5 மில்லியன் நுகர்வோர் பல மாதங்களாக நீர் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106