பொன் அணிகள் போர் இன்று ஆரம்பம்!

Friday, March 11th, 2022

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

எஸ்எல் மொபிரெலின் அனுசரணையில் நடைபெறவுள்ள இரண்டு நாள்களை கொண்ட போட்டியாக இன்றையதினம் ஆரம்பமான குறித்த போட்டி நாளையதினமும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்தது. இவ்வருடம் 105 ஆவது வருட இரு நாள் போட்டியும் 29 ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி மாரச் 18 ஆம் திகதியும் இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 21 இலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளன.

கொரோனா பெரும்தொற்று காரணமாக கடந்த வருடம் இப்போட்டிகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி ஏ.பி.திருமகன் , யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய டி.எஸ்.சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும்முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 33 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றியும் முடிவடைந்தன. மிகுதிப் போட்டிகளின் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

ஒரு நாள் போட்டியில் 21 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. 2020 இல் யாழ் மாவட்டத்திலே பாடசாலைகளுக்கு இடையே முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட ரி20 கிரிக்கெட் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி பெற்றது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு ஏ.எப்.டெஸ்வினும் யாழ்ப்பாண கல்லூரிக்கு என்.விஸ்னுகாந்தும் தலைமை தாங்குகின்றனர். இரு கல்லூரி அணிகளும் சமபலம் கொண்டவையாக காணப்படுவதினால் இக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106