இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, March 9th, 2022
இன்றிரவு (09) முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் இன்று (09) காலை ஆரம்பமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலுள்ள மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று பகல் வேளையில் எண்ணெய் வழங்கப்படவுள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள டீசலை ஏற்றிய 02 கப்பல்களில், ஒரு கப்பலிலிருந்து டீசலை இறக்கும் செயற்பாடுகள் இன்று காலை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 38,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அதற்கான கொடுப்பனவு இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விடைபெற்றுச் செல்லும் ஆண்டின் மிகப்பெரிய கடனாளி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
டெல்டா திரிபு தொற்றியவர்கள் ஆயிரக் கணக்கில் இலங்கையில் இருக்கலாம் - சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர்...
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகள் மறைக்கப்படுகின்றதா ? - நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணய...
|
|
|


