கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!
Monday, March 7th, 2022
இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் தரத்திற்கும் சர்வதேச நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பதன் மூலம் கடற்றொழில் சார்ந்து வாழும் தொழிலாளர்களின் நலன்களையும், பாதுகாப்பான எதிர்காலத்தினையும் உத்தரவாதப்படுத்துவற்கான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
ஐ.எல்.ஓ. எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், ஐ. எல். ஓ. அமைப்பினரின் பரிந்துரைகள் மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் முறை தொடர்பான அவதானிப்புக்கள் ஆகியற்றின் அடிப்படையில் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி! சபையில் பெரும் அமளிதுமளி!
பேருந்து வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்த பொலிஸார் எடுத்த முடிவு தவற...
சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய சிறந்த முதல் 25 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்தது!
|
|
|


