எரிபொருள் தட்டுப்பட்டால் மின்வெட்டு – இன்றுமுதல் வழமைக்கு திரும்புகின்றது எரிபொருள் விநியோகம் என அரசாங்கம் அறிவிப்பு!
Thursday, March 3rd, 2022
இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்தின் பின்னர் அது வழமைக்கு திரும்பும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தாமதமின்றி எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 37 ஆயிரத்து 300 மெற்றிக் தொன் டீசல் தொகை இன்று தரையிறங்கப்படவுள்ளது.
இதன்படி, மின் உற்பத்திக்காக சுமார் 8,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்போது காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு பின்னர் எவ்வித வெட்டுமின்றி மின்சார விநியோகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் இன்றுமுதல் முறையாக மக்களிடம் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் மின் தடைக்கான காரணத்தை கண்டறிவதே இதன் நோக்கம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106