அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை தேடி சுற்றிவளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை!
Wednesday, March 2nd, 2022
அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட1.5 மில்லியன் மொடனா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன!
நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு - பொலிஸார் கட...
|
|
|


