அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – பிரான்ஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் சந்திப்பு – இலங்கை – பிரான்ஸ் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Monday, February 28th, 2022

பாரிஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் ஃபிராங்க் ரெய்ஸ்டரை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பரிஸில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் சந்தித்துள்ளார்.

இதன்போது பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பிரான்ஸின் ஆதரவு குறித்து கலந்துரையாடினார்.

இரு அமைச்சர்களினதும் கலந்துரையாடலின் முடிவில் அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சர் பிரான்ஸின் வர்த்தக சபையில் பல கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆலோசகர் பெர்னார்ட் குயின்ட் மற்றும் சர்வதேச வணிக வலையமைப்புக்களின் தலைவர் எஸ்டெல் கில்லட் ஆகியோரை அவர் வணிக சபையில் வைத்து சந்தித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, பிரான்ஸ் மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான வலையமைப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்முனைவு, வணிக முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட விடயங்களில் கல்வித் திட்டங்களுக்கான பிரான்ஸின் நிபுணத்துவம் ஆகியன தொடர்பில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் பிரான்ஸில் உள்ள நிறுவனங்களின் மிகப்பெரிய சங்கமான எம்.ஈ.டி.ஈ.எப். இன்டர்நெஷனலின் ஃபிராங்கோயிஸ் கார்பினுடளும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106