வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – கனமழைக்கும் வாய்ப்புள்ளதென புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Sunday, February 27th, 2022

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமைமுதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானதுமுதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக 03.03.2022 வியாழக்கிழமை, 04.03.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 05.03.2022 சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு மாகாணம் முழுவதும் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.இது மாதிரிகளின்(Models) அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இக்காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதில்லை. எனினும் மாதிரிகள் தாழமுக்கம் உருவாகும் சாத்தியத்தையே வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106