இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் – இறுதி முடிவை அதிரடியாக அறிவித்த ரஷ்யா!

Sunday, February 27th, 2022

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில்,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் “இந்த அற்புதமான கட்டுப்பாடுகள் பொருளாதார தடைகள் நிச்சயமாக எதையும் மாற்றாது. அமெரிக்காவுக்கு இது தெளிவாக தெரியும். அதிபர் புதின் நிர்ணயித்த இலக்குகள் அடையப்படும் வரை போர் நடவடிக்கை தொடரும்” என ரஷ்ய தேசிய பாதுகாப்பு துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை உக்ரைன் மறுத்துள்ளது.

இந்நிலையில், பேச்சு வார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு தெரிவித்ததினை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உக்ரைனில் ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கிடங்கு பெரும் தீப்பிழம்புகளுடன் பற்றி எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

உக்ரைனின் தலைநகர் கிவ் பிராந்தியத்தில் உள்ள வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றே ரஷ்ய படைகளின் எறிகனை தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்தை நகரின் முதல்வர் நடாலியா பாலசினோவிச் மற்றும் அரசாங்க ஆலோசகர் என்டன் ஜெராசென்கோ ஆகியோர் உறுதிப்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106