எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை – வலுசக்தி அமைச்சு தெரிவிப்பு!
Saturday, February 26th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி தமது எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் லங்கா ஐ.ஓ.சி.யின் அனைத்து வகையான டீசலும் லீற்றருக்கு 15 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐ.ஓ.சியின் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 139 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா வீதம் அதிகரித்துள்ளது இதற்கமைய ஐ.ஓ.சியில் ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 204 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இதனிடையே லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கடந்த 6 ஆம் திகதியும் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.
எனினும் இலங்கை கனிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106