நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான பயணம் ஒத்திவைப்பு!
Friday, February 25th, 2022
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ இந்தியாவுக்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இன்று அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை செலுத்துவதற்காக அவரின் இந்தப் பயணம் அமையவிருந்தது.
இந்நிலையிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பசிலின் இந்திய விஜயத்தின்போது கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் மூன்று பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106