எதிர்வரும் வெள்ளியன்று மீண்டும் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!
Wednesday, February 23rd, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய அவர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமையன்று இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்ததாக தெரிவித்த அரசாங்கம், இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு மீண்டும் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி, இந்தியாவிடமிருந்து நாட்டுக்கு பெற்றுக் கொள்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அண்மையில் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106