மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம் தாங்கிய படையினர் கடமையில் – அதி விசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி உத்தரவு!
Tuesday, February 22nd, 2022
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவு அத்தியாயம் 40 இன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களில் பொது அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மின்சாரம் வழங்குதல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்றையதினம் வெளியிட்டிருந்தார்.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற அதை ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியைப் பேணுமாறு ஆயுதப்படையினருக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106