ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Monday, February 21st, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், பிரதான சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 26 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதப்படும் விடயங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்படாமல் உள்ளன.
இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் அது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அதனை வெளியிடுவதா? இல்லையா என்ற இறுதி தீர்மானத்தை ஜனாதிபதியே மேற்கொள்வார் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106