நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் – மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்து!

Monday, February 21st, 2022

நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான வீதம் திருப்பிச் செலுத்தப்படாமை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

அரச வங்கிகளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும்நட்டத்தைச் செலுத்தும் ஏனைய அரச நிறுவனங்கள் தொடர்பில் மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அரச வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106