தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை – அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி சுட்டிக்காட்டு!

Monday, February 21st, 2022

தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை என அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லது ஒழிப்பதற்கான மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அழைப்பு குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேநேரம் மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரகடனம் உட்பட, மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கைக்கு எதிராக ஏதேனும் சரத்துக்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சுட்டிக்காட்ட முடியும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சட்டம் இயற்றுவது இலங்கை மக்களின் உரிமை என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றுவதற்கு தமக்கு உரிமை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கே இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் வெளிப்படையாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106